தேவன் தந்த விடுதலை

 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.இந்த சாட்சியம் என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய விடுதலை பற்றியது. என் தந்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிப்பழக்கத்தில் இருந்தார், அனைவருக்கும் இருபத்துபோல்  அது அவருக்கும் ஒரு சமூக குடிப்பழக்கமாக தொடங்கியது, பின்னர் வார இறுதி மகிழ்ச்சியாக மாறியது, அது அவரை ஆட்சி செய்து அதற்கு அடிமையாக மாறத் தொடங்கியது. 10 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் நாங்கள் நிம்மதியாக தூங்கப்  முடியவில்லை, ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் சண்டையைப் பார்த்தோம் சமாதானம் இல்லை. நான் சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவின் விசுவாசியாக இருந்தேன், நான் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்தேன், கிறிஸ்தவ நண்பர்களால் சூழப்பட்டதால், விடுமுறை வேதாகமம் பள்ளி சென்றாதல் நான் கிறிஸ்துவைப் பற்றி அறிந்தேன். இயேசு நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்று அறிந்து கொண்டேன்.அப்படியே என் சகோதரர் சகோதரியும் இயேசுவை அறிந்து கொண்டார்கள். எனது அக்கம்பக்கத்தினர் மூலம் எனது தாயார்  கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொண்டார்.எங்கள் வீட்டில் என் தந்தையின் விடுதலைக்காகவும் வீட்டின் அமைதிக்காகவும் நாங்கள் தினமும் பிரார்த்தனை செய்து வந்தோம். கர்த்தர் என் தந்தையின் விடுதலை குறித்து என் அம்மாவிடம் ஒரு வேத வசனத்தின் மூலம் பேசினார் நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது என்று. 5 வருடங்களுக்கும் மேலாக அந்த வசனத்தை வைத்து ஜெபித்த அந்த பைபிள் வசனத்தை அவர்கள் விசுவாசிதார்கள். 2019 தவக்காலத்தின் போது என் அம்மா 40 நாட்கள் உபவாசம் இருந்தார்கள் அந்த நாட்களில் நாங்கள்  இரட்சிப்பு பேற்றுயிருக்கவில்லை, என் அம்மா அந்த நாட்களில் என் அப்பாவுக்காக ஜெபித்துக்கொண்டே இருந்தார். ஏப்ரல் 27 அன்று என் தந்தை குடித்துவிட்டு தூங்கினார் என் தாய் அவர் தலையின் மேல் கை வைத்து ஜெபித்தார்கள் அன்று நள்ளிரவில் என் தந்தை வாந்தி எடுக்கத் தொடங்கினார் மற்ற அறிகுறிகளும் தொடர்ந்து இருந்தன, 2 நாட்களுக்குப் பிறகு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிந்தோம், பின்னர் நாங்கள்  அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சுயநினைவுயின்றி இருந்தார். ஒரு மாத காலம் சிகிச்சைக்கு பிறகு அவர், கடவுளின் கிருபையால் ஜிவனை  பெற்றார். அதன்பிறகு அவர் உடல்நிலை சிறிது பின்னடைவு கண்டது அதன் பிறகு 2  அறுவை சிகிச்சை செய்து 4 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கர்த்தர் எங்களை கைவிடவில்லை எங்களோடு இருந்து தேவைகளை சந்தித்து கொடுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு எனது தந்தை முழுமையாக குணமடைந்தார். மேலும் சுதந்திரமாக நடக்க ஆரம்பித்தார் .கடவுள் கிருபையால் அலுவலகம் செல்ல தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு முதல் அவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டார், இப்போது நாங்கள் சமாதானமாக வாழ்கிறோம், எல்லா மகிமை கனத்தையும் கர்த்தருக்கே செல்லுத்கிறோம். ஆமென்🙏

Comments